பொதுவாக இரவு வேளைகளில் தூங்குவதற்கு முன்னர் குறிப்பிட்ட சில உணவுகளை தவிர்ப்பதால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
அந்த வகையில், சிட்ரஸ் பழங்களை இரவு வேளைகளில் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனின் ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை.
இவற்றை இரவில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் உங்களின் நிம்மதியான தூக்கமும் சீர்குலைந்து விடும்.
இது போன்று வேறு என்னென்ன பழங்களை சாப்பிடக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பொதுவாக வாழைப்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை. இவை இயற்கையான சர்க்கரை மற்றும் மாவுச்சத்து அதிகம் கொண்டவை. இரவில் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
2. மாம்பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது. இதனால் இரவில் வரும் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும்.
3. திராட்சைப்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரை இரவு நேர தூக்கத்தை பாதித்து மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
4. மற்ற பழங்களை விட அன்னாசிப்பழத்தில் அதிகமான அமிலத்தன்மை கொண்டது. இதனை இரவில் சாப்பிட்டு விட்டு தூங்கும் பொழுது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தும்.
5. செர்ரிகளில் மெலடோனின் இருந்தாலும், அவற்றை அதிகமாக உட்கொள்ளும் பொழுது இரத்த சர்க்கரையில் மாற்றத்தை ஏற்படுத்தி செரிமான கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.