ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் விசேட குணங்கள், எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் எல்லா வகையிலும் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் தெரியாத வேலையை கொடுத்தால் கூட விரைவில் கற்றுக்கொண்டு செய்யும் திறன் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
அப்படி பல்வேறு துறை சார்ந்த அறிவு மற்றும் பன்முக திறமை கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தலைமைத்தும் மற்றும் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நடிப்பு, இசை மற்றும் நடனம் போன்ற விடயங்களில் அதிக திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் எந்த விடயத்தை கொடுத்தாலும் முழுமையான ஈடுப்பாட்டுடன் வெற்றிகரமாக செய்து முடிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு வசீகர தன்மை கொண்ட இவர்கள் எந்த துறையில் வல்லுணர்கள் என்று குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்கு திறமைசாலிகளாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிக நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் ஆழ்ந்த அறிவுத் தாகம் பல துறைகளிலும் இவர்களை திறமைசாலிகளாக மாற்றுகின்றது. இவர்கள் தங்களுக்குள் தோன்றும் கேள்விகளுக்கு யாருடைய உதவியும் இன்றி விடை தேடும் இயல்பை கொண்டிருப்பார்கள்.
இவர்களின் இந்த தேடல் நிறைந்த அறிவு பல விடயங்களிலும் இவர்களின் திறனை வளர்த்துக்கொள்ள துணைப்புரிகின்றது.
மகரம்
மகர ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தங்களின் லட்சியத்தை நிறைவு செய்வதில் குறியாக இருப்பார்கள்.
இதற்காக பல்வேறு துறைகளிலும் தங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளும் தன்மை இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
இவர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் அசாத்தியமான திறமைசாலிகளாக இருப்பார்கள்.