பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் தொடர்புப்படுகின்றன.
எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் குறிப்பிடுகின்றது.
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.
எண்கணித சாஸ்திரமானது தொன்று தொட்டு புலக்கத்தில் காணப்படும் ஒரு பழைமை வாய்ந்த சாஸ்திரமாக காணப்படுகின்றது.
அதன் பிரகாரம் குறிப்பிட்ட எண்களில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே பெற்றோருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை கொடுப்பவர்களாக இருப்பார்களாம். இவர்கள் எதிர்கால வாழ்க்கை மற்றும் குணங்கள் எப்படியிருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1, 10, 19 அல்லது 28 ஆகிய திகதிகள்
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவகுணம் இருக்கும்.
இவர்கள் அதிகமாக முயற்சிகளை எடுக்காத போதிலும் இவர்கள் வாழ்வில் எளிமையாகவே உச்சநிலையை அடைவார்கள். இவர்கள் பிறப்பிலேயே அதிர்ஷ்டம் கொண்டவர்களாக பார்க்கப்படுகின்றார்கள்.
இவர்கள் கல்வியிலும் சரி தொழில் விடயத்திலும் சரி பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்துக்கொள்வார்கள்.
5, 14 அல்லது 23 ஆகிய திகதிகள்
இந்த திகதிகளில் பிறந்திருந்தவர்கள் வாழ்வில் பல்வேறு வகையிலும் வெற்றிகளை குவிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தகவல் தொடர்பு மற்றும் அறிவாற்றல் கிரகமான புதன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள்.
அதனால் கல்வியிலும் தொழில் துறையிலும் நிச்சயம் பிரகாசிப்பார்கள். இவர்கள் பெற்றோருக்கு அதிர்ஷ்டத்தையும் பெருமையையும் சேர்ப்பார்கள்.
7, 16 அல்லது 25 ஆகிய திகதிகள்
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
நெப்டியூன் கிரகத்தின் ஆதிக்கம் இவர்களில் அதிகம் இருக்கும். இவர்கள் சிறந்த கற்பனை ஆற்றல் மற்றும் புதிய விடயங்களை முயற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு உலகை பற்றிய சிறந்த புரிதல் இருக்கும் இதனால் வாழ்வில் வெற்றியை நோக்கி எளிமையாக பயணிப்பார்கள். இவர்களால் பெற்றோரின் மதிப்பும் மரியாதையும் உயரும்.