இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றது. இந்த நிலையில் தற்போது அக்டோபர் 2ம் திகதி நெருப்பு வளையமாக சூரிய கிரகணம் தோன்ற உள்ளது.
ஜோதிடத்தின்படி இந்த சூரிய கிரகணம் மகாளய அமாவாசை நாளில் ஏற்பட்மடிருப்பதால் சூரிய கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. இந்த நாளில் சனி ஷடாஷ்டக யோகமும் சூரியனும் இணைவு நடைபெறுகிறது இந்த தாக்கம் சில ராசிகளுக்கு ஏற்றதாக இருக்காது.
பொதுவாக சூரிய கிரகணம் என்றால் அனைவரும் கவனமாக இருப்பார்கள். ஆனால் இந்த சூரிய கிரகணத்தின் தாக்கத்திற்கு சில ராசிகள் மிகவும் கவனத்தடன் இருக்க வேண்டும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
- இந்த சூரிய கிரகணத்தால் நிங்கள் பொருளாதார நீதியில் கடமையாக பாதிக்கப்படுவீர்கள்.
- இந்த தாக்கம் உங்களுக்கு 15 நாட்களுக்கு இருக்கும்.
- எனவே பண விஷயத்தை கவனமாக செய்ய வேண்டும்.
- உடல் நலனில் அக்கறை மிகவும் கவனம் தேவை.
- மேலதிகமாக சிந்திப்பதால் பல பிரச்சனைகள் உங்களை தேடி வரும்.
- பணத்தின் கொடுக்கல் வாங்கல்களை மிக்க கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்.
- ஏதாவது ஒரு விஷயத்தில் முதலீடு செய்ய இருந்தால் நீங்கள் அதை தள்ளி வைப்பது நல்லது.
மிதுனம்
- சூரிய கிரகணத்தின்போது உங்களுக்கு பல தொல்லைகள் வந்து சேரும்.
- இந்த சூரிய கிரகணம் சனி மற்றும் சூரியன் இணைவதால் பல ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
- வேலை செய்யும் இடத்தில் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும் அதனால் உங்களது நேரத்தை அமைதியாக கடந்து செல்லுங்கள்.
- வீடு நீங்கள் போகும் வரும் இடம் என அனைத்து இடங்களிலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து சேரும்.
- இந்த விஷயத்தை அறிந்து கொண்டு அனைத்திலும் கவனமாக இருங்கள்.
கடகம்
- நீங்கள் இந்த சூரிய கிரகணத்தால் நிதி நிலமையில் பாதிக்கப்படுவீர்கள்.
- கடன் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இந்த கால கட்டத்தில் தலையிட கூடாது.
- வேலையில் யாருடனும் முரண்படாமல் வேலை செய்யுங்கள்.
கன்னி
- நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
- நீங்கள் வியாபாரிகளாக இருந்தால் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
- எந்த பிரச்சனை இருந்தாலும் அதை சமாதானமாக கொண்டு செல்லும் பண்பை வளர்த்தக்கொள்ளுங்கள்.
- உங்கள் ஜாதகத்தின்படி ஏதோ ஒரு வகையில் நீங்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்கக்ப்போகிறீர்கள்.
- பிடிக்காத விஷயம் நடந்தால் கூட அதை அமைதியாக நீங்கள் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.