பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி தங்களை அழகாக வெளிக்காட்டிக்கொள்ளவே அனைவரும் ஆசைப்படுவார்கள்.
என்றும் இளமையான தோற்றத்தில் முகத்தை பளப்பளப்பாக வைத்துக்கொள்ள யாருக்கு தான் பிடிக்காமல் போகும்? அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முகத்தை அழகுப்படுத்திக்கொள்வதில் அலாதி இன்பம் இருக்கும்.
இதற்காக நேரத்தையும் பணத்தையும் வாரி இறைப்பவர்கள் ஏறாளம்.முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சந்தைகளில் கிடைக்கும் ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்ககின்றது.
அப்படி ஒரு போதும் முகத்தை அழகுப்படுத்துவதற்காக முகத்தில் தவறியும் பயன்படுத்தவே கூடாது. ஒருசில பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பல் துலக்கும் பேஸ்டை எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவுடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் விரைவில் சிவப்பழகாகும் என்ற கருத்து சமூகவளைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
ஆனால் உண்மையில் அந்த பற்பசையை சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அவை சருமத்திற்கு பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டது கிடையாது என்பதால், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் சரும துளைகளை அடைத்துவிடும்.
அதிக உணர்திறன் கொண்ட சருமத்தில் பற்பசையை தடவினால் சில சமயங்களில் காயங்களை ஏற்படுத்தக்கூடும். இது பருக்கள், கரும்புள்ளிகளை உண்டாக்குவதுடன் மேலும் சருமத்தில் வீக்கம் மற்றும் தடிப்பு போன்ற பிரச்சிகைகளையும் தோற்றுவிக்கும்.
தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை முகத்தில் பயன்படுத்துவது எல்லா வகையான சருமத்துக்கும் பொருந்தக்கூடியதாக இருக்காது.
எண்ணெய் தன்மை அதிகம் கொண்ட சருமத்துக்கு இது ஒவ்வாமை மற்றும் முகப்பரு பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
முகத்தில் ஒப்பனையை நீக்கவும் சிலபேர் இவ்வாறு எண்ணெய் பயன்படுத்துவார்கள் ஆனால் அது உங்கள் சருமத்துக்கு ஒத்துப்போகுமா என்பதை அறிந்துக்கொள்ள முதலில் கைகளில் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
வாசனை திரவியங்கள் மற்றும் பாடி லோஷன்கள் கைகள், கால்கள், தொடைகள் மற்றும் முதுகு போன்ற உடலின் அடர்த்தியான பகுதிகளில் தடவுவதற்காக தயாரிக்கப்படுகின்றது.
அதனால் மென்மையான தோல் கொண்ட முகத்தில் அதனை பயன்படுத்துவது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் தவறியும் இந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
தினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஏறாளம் பேர் இருக்கின்றார்கள். அப்படி அதிகம் வெந்நீரை பயன்படுத்துவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
வெந்நீரில் காணப்படும் வெப்பம் சருமத்தை எரிக்கிறது, இதனால் சருமம் வறண்டு, முகப்பரு மற்றும் தோல் நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது.
அது மட்டுமன்றி சருமத்தில் இயற்கையபாகவே காணப்படும் எண்ணெய் தன்மையும் இல்லாமல் போகின்றது. எனவே சருமத்தில் வெந்நீரை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.