ஜோதிடத்தைப் போலவே கைரேகையும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. நமது கைகளில் நம் கண்ணுக்கு தெரியாத அளவில் கூட நிறைய அடையாளங்கள் உள்ளன.
இந்த அடையாளங்கள் மற்றும் சில அச்சுக்களுக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. அந்த வகையில் கைரேகையின் படி, ஒரு நபரின் உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள் அவரது கர்மாவின் அடிப்படையில் உருவாகின்றன.
இந்த ரேகைகள் மூலம் ஒருவரின் தலைவிதி, தொழில், செல்வம், குடும்ப அந்தஸ்து ஆகியவற்றை அறிய முடியும். இது கைரேகை நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைகளில் மீன் ரேகை அடையாளம் இருந்தால் அந்த நபருக்கு வாழ்க்கையில் என்ன பலன் என்பதை இந்த பாிவில் விரிவாக பார்க்க முடியும்.
தற்போது நாம் எல்லோரும் சிறப்பாக வாழ பலமுடைய உழைப்பாழியாக மாறியுள்ளோம். பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காக ஒவ்வொரவரம் இரவும் பகலுமாக கஷ்டப்பட்டு உழைக்கின்றனர்.
இது சிலருக்கு அதிஷ்டத்தையும் கொடுக்கக்கூடியது. ஆனால் கைகளில் இருக்கும் அடையாளங்கள் மனிதனின் வாழ்க்கையில் அவன் வெற்றி பெற தடைகளின்றி வழிவகுத்து கொடுக்கும்.கைரேகையின் படி, உள்ளங்கையில் மீன் அடையாளத்தை வைத்திருக்கும் ஒருவர் அதிர்ஷ்டசாலி என கருதப்படுகிறார்.
கையில் உள்ள மீனின் அடையாளம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த குறியீடு இருப்பவர் மிகப்பெரிய பலத்தை இதனால் பெறுகின்றார். நிபுணரின் விளக்கப்படி மீனின் அடையாளம் கொண்ட நபர்கள் ஏதாவது ஒரு துறையில் தன் ஆதிக்கத்தில்சிறந்து விளங்குவார்.
புதிய விஷயங்களை படைப்பதில் இவர்கள் வல்லவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான் பெரிய கலைஞர்களாகவும் படைப்பாளியாகவும் உருவெடுக்கின்றனர். கைரேகையின் படி, உள்ளங்கையில் எம் (M) என்ற முத்திரை மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இவர்கள் ஒரு நல்ல தலைவர்களாக சிறந்து விளங்குவார்கள்.மீன் அடையாளம் இருப்பது புகழைக் குறிக்கிறது. சூரியன் மலையில் உள்ளங்கையில் மீன் அடையாளத்தை வைத்திருப்பவர் மதிக்கக்கூடிய சிறந்த வேலைகளில் இருப்பார்கள்.
மீனின் குறி அவர்களுக்கு பெரிய வெகுமதிகளையும் தருகிறது என்று கூறப்படுகிறது. மீனின் அடையாளம் ஹஸ்த ரேக சாஸ்திரத்தின்படி மங்களகரமானதாக கருதப்படுகின்றது. இதில் பிறந்த நபர்கள் நீதிமான் மற்றும் நல்லொழுக்கமுள்ளவர் என்று கூறப்படுகிறது. அத்தகையவர்கள் ஒழுக்கத்தை விரும்புபவர்களாகக் கருதப்படுகிறார்கள்.