குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது.ஒரு குழந்தை பிறப்பதற்கும் அந்த குழந்தை பிறந்த நாள் மிகவும் முக்கியதுவம் பெறுகின்றது.
இதற்கு காரணம் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்தை குறிப்பிடுகின்றது. எனவே இந்த கிரகங்களை நாம் ஜோதிட முறைப்படி நம்புகிறோம். அதில் ராசிபலன் நட்சத்திரம் இப்படி ஏராளம் உள்ளது.
அல் எல்லாவற்றையும் தாண்டி ஒருவர் பிறக்கும் கிழமை தான் இது அனைத்தையும் தீர்மானிக்கும். எனவே ஒவ்வொரு கிழமைகளிலும் பிறந்த குழந்தைகளின் அடிப்படையில் எந்த கிழமைகளில் பிறந்தவர்கள் அதிஷ்டத்தை பெறுகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
திங்கட்கிழமை
- திங்கள் கிழமைக்குரிய கிரகம் சந்திரன். இந்த திகதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் சாயலில் பாதிக்கப்படுகிறார்கள்.
- இதனால் இவர்களுக்கு வாழ்க்கையில் எதை எடுத்தாலும் அதில் சிக்கல்கள் வந்த பின்பே வெற்றி கிடைக்கும்.
- இந்த குழந்தைகள் பேரும், புகழுடன் அனைவரும் மதிக்கக்கூடிய வாழ்க்கையை வாழ்பவர்கள்.
- இவர் முயற்சிக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவார்கள்.
- இதை தவிர இந்த கிழமை பிறந்தவர்கள் வசீகரமான தோற்றத்தையும், நகைச்சுவை நபர்களாகவும் இருப்பார்கள்.
- இதனால் இவர்கள் பெருமளவில் ரசிகர்களை ஈர்த்து வைத்திருப்பார்கள்.
- இவர்களுக்கு பொழுது போக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும்.
- இவர்கள் உதவி கேட்கும் அனைவர்க்கும் உடனே உதவி செய்யும் மனமுள்ளவர்கள்.
- வாழ்கையில் எல்லாம் செய்த பின்அதை பற்றி யோசிப்பார்கள். இவர்களுக்கு ஆளுமை தின் அதிகம் இருக்கும்.
செவ்வாய் கிழமை
- இந்த கிழமைக்கு உரிய கிரகம் செவ்வாய்.
- இந்த கிழமையில் பிறந்தவர்கள் தனது கடுமையான உழைப்பினால் முன்னேற்றம் அடைந்து குறிப்பிட்ட இலக்கினை அடைந்தே தீர்வாகள்.
- இதனாலேயே இவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.
- இவர் வீணான சண்டைக்கு போகமாட்டார் ஆனால் அதிக போபக்காரர்கள்.
- இவர்களுடன் பேசும் பொழுது சற்று கவனமாக பேசவேண்டும்.
- மிகவும் அன்பான மனிதர்களாக இவர்கள் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளும் பழக்கம் கிடையாது.
புதன்கிழமை
- புதன் கிழமைக்குரிய கிரகம் புதன் ஆகும். இந்த கிழமையில் பிறந்த குழந்தைகள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பாக இருப்பார்கள்.
- இவர்கள் சிறந்த கல்வி, கேள்வி, ஞானம், பட்டம் படிப்பு பெற்று உயர்ந்த பதவியை அடையும் திறமைசாலிகள்.
- தனக்கு தேவை இல்லாதவற்றிலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம்.
- இவர்ளிடம் இயற்கையாகவே கொஞ்சம் கூச்ச சுபாவம் இருக்கும்.
- இவர்கள் செல்வத்தை விட்டு போனாலும் இவர்களிடம் செல்வம் வந்துகொண்டே இருக்கும்.
வியாழக்கிழமை
- வியாழக்கிழமைக்குரிய கிரகம் குரு பகவான்.
- இந்த கிழமையன்று பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
- மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
- வியாழக் கிழமை பிறந்தவர்கள் நன்னெறிக்கு இருப்பிடமாக திகழ்வார்கள்.
- எனவே இவர் தேவையில்லாத பிரச்சனைகளில் அவ்வளவு சீக்கிரமாக மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.
- குறிப்பாக தன்னடக்கம் அதிகம் இருப்பார்கள். தெய்வ வழிபாடுகளிலும், ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.
- வாழ்க்கையை குறித்து தெளிவான திட்டமிடுதலும், முறையான அணுகுமுறையும் இவரை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
- தோலிவியை எத்தனைமுறை தழுவினாலும் இவர்களுக்கு வெற்றி தான்.
- அந்த வகையில் சொல்லப்போனால் இவர்களுக்கு தோல்வி என்றும் எதுவும் இல்லை.
வெள்ளிக்கிழமை
- வெள்ளி கிழமைக்குரிய கிரகம் சுக்கிரன். வெள்ளியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் சகல சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள்.
- வாழ்க்கை வாழ்வதற்கே என்று இவர்கள் வாழ்பவர்கள்.
- விரும்புவதை அடையும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
- என்னதான் உழைத்தாலும் இவர்களின் உழைப்பு மற்றவர்களையே போய் சேரும்.
- புகழ்ச்சியை அதிகம் விரும்பும் நபர்களாக இருப்பதால் இவர்களிடம் புதிய தேடல்கள் இருக்கும்.
- இவர்களுக்கும் அவநம்பிக்கைக்கும் பொருந்தவே பொருந்தாது.
- பொதுவாக பெண் குழந்தைகள் வெள்ளி கிழமையில் பிறந்தால் அந்த குழந்தை வளர வளர செல்வம் வீட்டில் செல்வம் செழித்துக்கொண்டே இருக்கும்.
சனிக்கழமை
- இந்த கிழமைக்குரிய கிரகம் சனி பகவான். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு அதிகளவு சமயோஜித புத்தி உள்ளவராக திகழப்படுவார்.
- இவர்கள் ஒரு விஷயத்தில் சோம்பேறித்தனம் பட்டால் அப்படியே தான் இருப்பார்கள் மாற்றம் இல்லை.
- ஆனால் ஒரு விஷயத்தை செய்து அதில் வெற்றி கண்டுவிட்டால் இவர்களை அடிக்க ஆளே இல்லை.
- நண்பர்களுக்கு எதையும் செய்யும் எண்ணம் கொண்டவராக திகழ்வார்கள்.
- இந்த கிழமைகளில் பிறந்தவர்கள் எப்போதும் தனிமை விரும்பிகள்.
- தன்னிடம் நல்லவனாக ஒருவர் இருந்தால் இவரும் நல்லவனாகஇருப்பார். கெட்டவனாக இருந்தால் இவர்களும் கெட்டவர்களாக இருப்பார்கள்.
ஞாயிற்றுகிழமை
- ஒருவர் ஞாயிற்று கிழமையில் பிறந்தால் செல்வ செழிப்பு விருத்தியாகும், செல்வாக்கும் அதிகரிக்கும்.
- மேலும் அவரது நடுப்பகுதி வாழ்கையில் மத்திய வயதில் அதாவது 40, 45 வயதிற்கு மேல் மிகுந்த பேரும், புகழுடன் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.
- எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாவே இருப்பார்கள்.
- ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்.