ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
இந்த வகையில் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரன் ஒருவரின் ராசியில் உச்சம் பெற்றிருந்தால் இவர்களின் வாழ்வில் செல்வ செழிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது.
அந்த வகையில் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 24 ஆகஸ்ட் 2024 அன்று அதிகாலை 1:16 மணிக்கு கன்னி ராசிக்கு சுக்கிரன் இடம்பெயர்ந்துள்ளார். குறித்த பெயர்ச்சி ரிஷபம் மற்றும் கடக ராசியினருக்கு சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
அதே நேரம் இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படுகின்ற தாக்கமானது 12 ராசிகளிலும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை கொடுக்கப்போகின்றது. அப்படி சிக்கலை எதிர்கொள்ள போகும் ராசியினர் யார் யார் இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
இந்த சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசியினர் வாழ்க்கையில் பெரியளவில் பாதக விளைவை ஏற்படுத்தும். இவர்கள் குடும்பத்தில் மகிழ்சியற்ற சூழல் உருவாகும்.
வியாபாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு பெரியளவில் நிதி நெருக்கடி அல்லது நட்டம் ஏற்பட வாய்ப்பு காணப்படுவதால் பணத்தை கையாளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
தேவையற்ற பிரச்சினைகள் தானகவே உங்களை தேடி வரும் வாய்ப்புகளும் வாய் தர்க்கங்களால் முறன்பாடுகளில் சிக்கிக்கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது இதனால் வார்த்தைகளை பிரயோகிக்கும் போது அலட்சியமாக இருக்காதீர்கள்.
மிதுனம்
இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மிதுன ராசியினர் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சவாலான காலகட்டமாக இருக்கின்றது.
தொழில் ரீதியில் பிரச்சினைகளை சந்தித்து இடமாற்றத்தை எதிர்கொள்ள நேரிடலாம். காதல் வாழ்விலும் தேவையற்ற வாக்குவாதங்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
குடும்பத்திலும் திருமண வாழ்விலும் மகிழ்ச்சியற்ற சூழல் உருவாகும். இந்த காலகட்டத்தில் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியினர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இந்த சுக்கிரன் பெயர்ச்சி பல்வேறு வகையிலும் துன்பத்தை ஏற்படுத்தும். தொழில் விடயங்களில் எடுக்கும் புதிய முயற்சிகள் தோல்வியை அல்லது நட்டத்தை ஏற்படுத்தலாம்.
கடினமாக ஊழைத்தாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்காதது போல் உணர்வீர்கள். இந்த நேரத்தில் உங்கள் மனைவியுடன் இணக்கமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் திருமண உறவில் பெரிய விரிசல் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.