ஒருவரின் எதிர்காலம் மற்றும் அவரது இயல்புகளை அறிய நாம் ராசியை பார்க்கிறோம். ஆனால் இது ராசி அடிப்படையில் மட்டுமின்றி எண் கணிதத்தின் மூலமும் கணக்கின் அடிப்படையிலும் ஒருவரது இயல்பு, திறமைகள், எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகொள்ள முடியும். இது ஒவ்வொரு இலக்கத்தை பொறுத்தது.
அந்த வகையில் பார்த்தால் சில திகதிகளில் பிறந்த பெண்கள் தன் இச்சையில் கெட்டிக்காரர்கள் என்று கூறப்படகின்றது. அவர்கள் எந்த திகதி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
நான்காம் இலக்கத்தில் பிறந்தவர்கள்
4 என்ற எண் ராகு ஆளும் கிரகமாக கருதப்படுகிறது. இந்த எண்ணை கூட்டு எண்ணாக கொண்டவர்கள் அவர்கள் விருப்பம் போல் இயங்க வேண்டும் என நினைப்பார்கள்.
இந்த பெண்கள் பொதுவாக துணைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள். மனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் இவர்கள் செய்வார்கள். மற்றவர்களின் வார்த்தை இவர்களுக்கு தேவை இல்லை.
இதனால் பல விஷயங்களை இவர்கள் துணையிடம் இருந்து மறைக்க ஆரம்பிப்பார்கள். தொழில் பணம் போன்ற பல விஷயங்களை மறைப்பார்கள். ஆனால் இவர்களின் கணவர்களுக்கு இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
எனவே இந்த திகதியில் பிறந்த பெண்களை ஆண்கள் நம்பினாலும் இவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த பெண்கள் தன் சுதந்திரத்தை விரும்புவதால் அதை விரும்பும் ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள். இந்த குணம் மூல எண்ணான 4 இல் பிறந்த அனைவருக்கும் இது இருக்கும்.
25 ம் திகதியில் பிறந்தவர்கள்
இந்த திகதியில் பிறந்த பெண்களின் பொதுவான குணம் இவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். இவர்களுககு சுற்றுலா என்பது மிகவும் பிடிக்கும்.
இந்த பெண்கள் தங்களுக்கு பிடித்தவற்றை செய்ய நினைப்பார்கள். இந்த காரணத்தினால் இவர்கள் தங்கள் கணவனை கூட கண்டுகொள்ள மாட்டார்கள். பொதுவாக பல புதிய விஷங்களில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.
பணம் தன்னிடம் அதிகமாக பணம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். சொத்தில் நிறைய நாட்டம் இருக்கும் ஆனால் தன் துணையை யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
ஆனால் இவர்கள் சில சொத்து, பண விஷயத்தை தங்கள் துணையிடம் இருந்து மறைப்பார்கள். இந்த திகதியில் பிறந்த பெண்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று எண்கணிதம் கூறுகின்றது.