பலருக்கும் தலைமுடி என்றால் மிகவும் பிடிக்கும் எல்லோரும் தங்களது தலைமுடி மிகவும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் மனிதன் தன்னை வேலை செய்ய ஊக்கப்படுத்தி அவசரமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறான்.
இதனால் உண்டாகும் தூசு மாசு காரணமாக தலைமுடி மொத்தமாக சேதமடைகின்றது. இது மட்டுமல்லாமல் பொடுகு அழுக்கு போன்றவற்றால் முடி உதிர்வதும் கூடுதலாக இருக்கிறது.
இவ்வாறு சேதமடையும் தலைமுடியினை எவ்வாறு உதிராமல் பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்த தலைமுடியின் அரிப்பு, பொடுகு மற்றும் முடி உதிர்வை நீக்க தோல் மருத்துவர் கூறுவது சிறிய வழிமுறைகளை பின்பற்றலாம். வீட்டில் உங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் நீங்கள் ஹேர் மாஸ்க்குகளை போடுவது நல்லது.
இது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். இதற்கு நீங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்ய வேண்டும். கடைகளில் வாங்குவதால் அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து முடியின் ஊட்டச்சத்தை உறிஞ்சி எடுக்கும்.
இதற்காக நீங்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த யோசனையாகும். இது முடி வேர்களின் உட்ச்சென்று கிருமிகளை அகற்ற கூடியது. இதனுடன் நீங்கள் வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசிக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, உங்கள் தலைமுடியில் சமமாக தடவினால் அது உங்கள் ஆரோக்கியத்தை முற்றிலும் பளபளப்பாக்கும்.
இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு தோல் தொடர்பான பிரச்னைகளை குறைக்க மிகவும் உதவியாக உள்ளது.
மேலும், இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இறந்த செல்களை அகற்றி, சரும தொற்று மற்றும் ஒவ்வாமைகளில் இருந்து பாதுகாக்கிறது.
எனவே இதை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது தலை பொடுகு தொல்லையில் இருந்து விடுபடும். வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன.
இது தலையின் உட்பகுதியில் ஊடுருவி சென்று ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. தலைமுடியை பாதுகாக கட்டாயம் இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி பெறுபேற்றை பெறுங்கள்.