ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு நபர் பிறக்கும் ராசியானது அவரின் எதிர்கால வாழ்க்ககை மற்றும் ஆளுமை, விசேட பண்புகள் ஆகியவற்றுடன் நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றது.
அந்த வகையில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட தனித்துவ குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். தனுசு ராசியை எதிர்ப்பது அழிவை ஏற்படுத்தும் எனவும் ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தனுசு ராசியில் பிறந்தவர்களின் எதிர்கால வாழ்கை எப்படி அமையும் என்பது தொடர்பிலும் அவர்களின் தனித்துவ பண்புகள் குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே புத்திக்கூர்மை அதிகம் கொண்டவர்களாகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருப்பவர்களளாகவும் காணப்படுவார்கள்.
தனுசு ராசியினர் குருவால் ஆளப்படுபவர்கள் அதனால் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். இவர்களுக்கு பணத்தட்டுப்பாடு என்பது மிகவும் அரிதாகவே ஏற்படும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த ராசி உபய ராசி என குறிப்பிடுகின்றது.12 ராசிகளில் அது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ராசியாக காணப்படுகின்றது.
தனுசு ராசியினர் எப்போதும் சாகசத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த ராசிக்காரர்களிடம் எண்ணற்ற ஆற்றலும், ஆர்வமும் நிறைந்திருக்கும். அவர்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நேர்மையான வாழ்க்கையை அதிகம் விரும்பும் ராசியினராக இருப்பார்கள். இவர்களிடம் அதிகமாக குழந்தை குணம் மாறாமல் இருக்கும்.இப்பினும் கோபம் வந்துவிட்டால் நெருப்பை போல் இருப்பார்கள். அவர்களை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது.
இவர்கள் தைரியமாகவும் தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விடயங்களை முன்னமே அறியும் ஆற்றல் இவர்களுக்கு காணப்படும். இவர்கள் வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.