திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் அவசியம் கடைபிடிக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று.
இந்த விரதம் நாம் யாவருக்கும் அன்னையான மகாலட்சுமி நினைத்து வீட்டில் செய்யக்கூடிய ஒரு வழிபாடாகும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்வார்கள். வரலட்சுமி பூஜை ஆரம்பிப்பதற்கு முதல் நாள் அம்மனை வீட்டிற்கு அழைப்பார்கள், இரண்டாம் நாள் வரலட்சுமி பூஜை செய்து மகாலட்சுமியை வழிபடுவார்கள், மூன்றாம் நாள் பூஜை பூர்த்தி வழிபாடு செய்வார்கள்.
இப்படி மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய வரலட்சுமி பூஜை அன்று சில தீராத பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்தால் பிரச்சினை சரியாகும் என்பது ஐதீகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பணப்பிரச்சினையுள்ளவர்கள் விரதம் இருந்து பரிகாரங்கள் செய்வார்கள்.
அப்படி தீராத பணக்கஷ்டங்களை இல்லாமலாக்கும் பரிகாரங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தில் வரக்கூடிய கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகும். விரதம் ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அதாவது வியாழக்கிழமை அன்று மாலை 6 - 8 மணி வரை கலசம் வைத்து வழிபடுபவர்களாக இருக்கும்.
அந்த சமயத்தில் அம்மனை வழிபட்டு வீட்டிற்கு அழைக்க வேண்டும். இதனை வியாழக்கிழமை செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் 6 - 7 மணிக்குள் செய்யலாம். வெள்ளிக்கிழமை பூஜை செய்வதாக இருந்தால் காலை 9 - 10:20 மணிக்குள் வழிபாடு செய்யலாம். இதனை தவறும் பட்சத்தில் மாலை 6:00 மணிக்கு தங்களின் வீடுகளில் பூஜைகளை செய்யலாம்.
கலசம் வைக்காமல் மகாலட்சுமியின் படத்தை வைத்து வழிபாடு செய்பவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் 6 - 7 மணிக்குள் மகாலட்சுமியின் படத்தை அலங்கரித்து வீட்டு வாசலில் இருந்து உள்ளே செல்லும் படி கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடுகளை செய்யலாம்.
இந்த பூஜையின் போது மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாக சிறிது வெட்டிவேர், வெள்ளை மொச்சை ஒரு கைப்பிடி அளவு, விரலி மஞ்சள் அல்லது குண்டு மஞ்சள் ஒன்று ஆகிய பொருட்களை வைத்து மகாலட்சுமி தாயாரை மனதார வழிபாடு செய்ய வேண்டும்.
அப்போது, “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி, ஓம் சுக்ர பகவானே போற்றி” என்று கூற வேண்டும். அந்த வார்த்தைகளை உச்சரித்தப்படி ஒரு மஞ்சள் நிற துணியை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் இந்த மூன்று பொருட்களையும் சிறிய மூட்டையாக கட்டி நம்முடைய வீட்டு வாசலில் கட்டி விட வேண்டும்.
பலன்கள்
- இப்படி செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும் வறுமை நீங்கும்.
- வீட்டில் மங்களங்கள் உண்டாகும்.
- வணிகம் மற்றும் தொழில் சிறப்பாக நடைபெறும்.
- இதுவரை காலமும் வராமல் இருக்கும் பணம் உங்கள் வீட்டை வந்தடையும்.
- பணத்தின் வரவு இப்படி செய்தால் அதிகமாக இருக்கும்.
- இந்த பரிகாரத்தை வீட்டில் செய்வதிலும் பார்க்க வணிகம் செய்யும் ஸ்தாபனத்திலும் கட்டலாம் தொழிலில் லாபம் கிடைக்கும்.