ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை 17ஆயிரத்து 25பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை ஒன்பது இலட்சத்து 85ஆயிரத்து 346பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 941பேர் பாதிப்படைந்ததோடு, 111பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 63ஆயிரத்து 938பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எட்டு இலட்சத்து நான்காயிரத்து 383பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்