தொழில்நுட்பம் நமக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுத் தந்தாலும்கூட அதனால் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில் தொலைபேசியை நாம் அதிக நேரம் பயன்படுத்துவது நேர விரயம் என்பதோடு நமக்கு உடல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக குழந்தைகள் தொலைபேசியை நீண்ட நேரம் உபயோகப்படுத்துவதைக் குறைக்கவும் தேவையற்ற விடயங்களை பார்க்காமல் தடுக்கவும் என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.
ஸ்க்ரீன் நேரத்தை அமைத்தல்
செட்டிங் ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டும்.
உங்களது ஐபோனில் உள்ள செட்டிங்ஸை திறந்துகொள்ள வேண்டும். இது சாம்பல் நிற ஐகோன் மூலம் அடையாளம் காணப்படும்.
ஸ்க்ரீன் டைம்
அப்படியே கீழே ஸ்க்ரோல் செய்தால் ஸ்க்ரீன் டைம் எனும் ஒப்ஷன் காண்பிக்கப்படும்.
அதில் கன்டென்ட் அண்ட் பிரைவசி ரெஸ்ட்ரிஷ்ன்ஸ் என்பதை டெப் செய்யவும்.
இப்போது கன்டென்ட் பிரைவசி ரெஸ்ட்ரிஷன்ஸ் என்ற ஒப்ஷன் வரும். அதனை ஒன் செய்ய வேண்டும்.
அடுத்ததாக கன்டென்ட் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்க்கு செல்ல வேண்டும்.
அதில் வெப் கன்டன்ட் என்பதை தெரிவு செய்யவும்.
அதில் மூன்று படிகள் காண்பிக்கப்படும். அதில் நீங்கள் எதை ப்ளொக் செய்ய விரும்புகிறீர்களோ அதனை ப்ளொக் செய்து விட்டால் உங்கள் குழந்தைகள் இனி பாதுகாப்பான ப்ரவுசிங்கை பயன்படுத்தலாம்.