பொதுவாக விதைகளிலுள்ள குளுக்கோஸ், வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த வகையில், பேரிச்சம்பழங்கள் ஆற்றலை அதிகரிக்கும் பண்பு கொண்டது. ஆனால் அதிலுள்ள விதைகளை நாம் தூக்கி எறிகிறோம்.

இதுவும் பேரிச்சம்பழங்களை போல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த விதைகளில் இருக்கும் ஊட்டசத்துக்கள் சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு ஏற்படும் குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தை கட்டுபடுத்தும்.

பேரீட்சை விதைகளின் பலன்கள் தொடர்பில் நிபுணர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் பேரீட்சை விதை பொடி- மருத்துவ நிபுணர்கள் விளக்கம் | Dates Seeds Powder Benefits Blood Sugar Levels1. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அளவிற்கு பேரீட்சைப்பழ விதைகளில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் தாரளமாக சாப்பிடலாம்.

2. பேரீட்சை விதைகளின் தூள் நோயாளிகளின் ரத்த குளுக்கோஸின் அளவைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. ஏனெனின் பேரீட்சை விதைகளின் தூளில் ஹைப்பர் கிளைசெமிக் உள்ளது. இது சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நன்மையளிக்கும்.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் பேரீட்சை விதை பொடி- மருத்துவ நிபுணர்கள் விளக்கம் | Dates Seeds Powder Benefits Blood Sugar Levels3. பேரீட்சை விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. அத்துடன் செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து இதய நோயின் அபாயத்தை குறைக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் பேரீட்சை விதை பொடி- மருத்துவ நிபுணர்கள் விளக்கம் | Dates Seeds Powder Benefits Blood Sugar Levels

  • காலையில் ஸ்மூத்திகளுடன் ஒரு டீஸ்பூன் பேரீட்சை விதைகளின் தூள் கலந்து குடிக்கவும்.
  • ரொட்டி மற்றும் மஃபின் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.