பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் கர்ப்பக்காலம் என்பது மிக முக்கியமானது.
இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
உதாரணமாக நடைபயிற்சி, உறக்கம், உணவு, அன்றாடப் பழக்கவழக்கங்கள் போன்றவைகளை கூறலாம்.
தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்காக தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகமாக கவனம் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சில விடயங்களை மறந்தும் செய்யக்கூடாது எனவும் கூறப்படுகிறது.
அப்படி என்னென்ன விடயங்களில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சமைக்கப்படாத இறைச்சி, புகையை பயன்படுத்தி சமைக்கும் கடல் உணவுகள், பச்சை முட்டை, மென்மையான பாலாடைக்கட்டி மற்றும் பேஸ்டுரைஸ் (Pasteurize) செய்யப்படாத பால் பொருட்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. தினமும் காலையில் எழுந்தவுடன் காபியுடன் தான் அன்றைய நாளை துவங்குவேன் என கூறும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது காபியை தவிர்ப்பது நல்லது. அதிகமான காஃபின் உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும்இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும்.
3. உடலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரை நாடி அவரின் பரிந்துரையின் படி மாத்திரைகள் எடுத்து கொள்வது கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனின் நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் வயிற்றில் இருக்கும் கருவுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு இருக்கிறது.
4. வண்ணப்பூச்சுகள் இருக்கும் இடத்திற்கு கர்ப்பிணி பெண்கள் செல்லாமல் இருப்பது நல்லது. அத்துடன் கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் வருவதை கட்டுபடுத்த வேண்டும். இவை கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
5. கர்ப்ப காலத்தில் பெண்கள் கால்களுக்கு சங்கடமான மற்றும் பாதுகாப்பற்ற காலணிகளை அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மூன்று அங்குலம் அல்லது அதற்கும் குறைவான உயரம் கொண்ட ஹீல்ஸ்களை அணியலாம்.