இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் லேசான அறிகுறிகளுடன் இருந்த எஸ்பிபி உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மோசம் அடைந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

தொடர்ந்து சில தினங்களாக எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்ட கொரானா டெஸ்டில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார் எஸ்பிபி சரண்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் அப்பாவின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி. தற்போது அப்பாவின் உடல்நிலை நலமாகவும் சீராகவும் உள்ளது.

இறுதியாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால் பூரண குணமடைந்துள்ள எஸ்பிபி இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா தொற்றில் இருந்து மீண்டு இருப்பது ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.