காதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு விடயமாகவே இருக்கின்றது. இந்த உணர்வை யாராலும் தவிர்க்கவே முடியாது. காரணம் இது யாருக்கு யார் மீது எந்த தருணத்தில் ஏற்படும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பெண் ராசியினர் மிகவும் எளிதாக காதலில் விழுந்துவிடுவார்கள். குறிப்பாக கண்டதும் காதல் என்பது இந்த ராசியினருக்கு தான் நிகழும்.
அப்படி இலகுவாக காதல் வலையில் சிக்கிக்கொள்ளும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் ஆசையின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்பகின்றார்கள்.அவர்கள் வாழ்வில் ரிஸ்க் எடுப்பதற்கு ஒருபோதும் பயமோ, வெட்கமோ கொள்ளமாட்டார்கள். இவர்கள் இயல்பாகவே காதல் தரும் மகிழ்ச்சியை அதிகம் விரும்புகின்றார்கள். இதனால் எளிதில் காதல் கொள்ளும் தன்மை இவர்களிடம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள்.இதனால் இவர்களுக்கு மற்றவர்களை ஈர்க்கும் தன்மை இயல்பாகவே இருக்கும். இவர்கள் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதை மிகவும் விரும்புகின்றார்கள். இதனால் இந்த ராசி பெண்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த பெண்கள் உலக மகிழ்ச்சிகளுக்கு அதிபதியான சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள்.இதனால் இவர்களுக்கு பிறப்பிலேயே காதல் உட்பட அனைத்து உலக இன்பங்களின் மீது பற்று அதிகமாக இருக்கும். இதனால் இவர்கள் விரைவில் காதல் வயப்படுவார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்த பெண்கள் ஆன்மீகத்தின் கிரகமான நெப்டியூனால் ஆளப்படுகிறார்கள். இதனால் இவர்களுக்கு அதீத இரக்க குணமும் பாசமும் காணப்படும். இவர்கள் உணர்ச்சிகளுக்கு எளிதில் கட்டுப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் விடயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.