வீடு கட்டும் போது வாஸ்து படி வெள்ளி நாகம் வைப்பது வழக்கமாக வைத்துள்ளதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்துக்களின் சம்பிரிதாயப்படி வீடு கட்டும் போது வாஸ்த்துப்படி கட்டவில்லை என்றால் வீட்டில் மகிழ்ச்சி இருக்காது என்று சொல்லப்படுகிறது.
அதனாலேயே அனைவரும் வாஸ்து படி வீட்டின் ஒவ்வொரு அறை, கதவு என அமைக்கிறார்கள். இதன்போது சில விதிகளும் இந்த சமயத்தில் கையாளப்படுகின்றன.
அதே போல தான் வீடு கட்டுவதற்கு முன்பு அஸ்திவாரத்தின் போது பூமியில் வெள்ளி பாம்புகள் அல்லது கலசங்கள் வைக்கப்படும். இதுவே வீடு கட்டுவதற்கு முதல் விதி.
இதற்கான காகரணம் வாஸ்த்துப்படி பாம்புகள், கலசங்களை வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்.
ஸ்ரீமத் பகவத் மகாபுரானின் ஐந்தாவது காண்டத்தில் பூமிக்கு அடியில் பாதாள உலகம் இருப்பதாகவும், பாதாள உலகத்தின் அதிபதி ஷேஷ்நாக் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் பாம்புகள் வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த பாம்புகள் வீட்டை பாதுகாப்பாதாக ஐதீகம். இதனால் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றும், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும் நாக தோஷம், வாஸ்து தோஷ பிரச்சனைகளும் நிவர்த்தியாகுமாம். வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் வீடு கட்டும் முன் வெள்ளி நாகங்கள் கலசங்கள் வைக்கப்படுகின்றன.