பொதுவாகவே வாழ்கைக்கு தேவையான பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும்.
அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரித்து பணப்பிரச்சினைகளுக்கு முடிவுக்கட்ட வேண்டும் என்றால் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முள் உள்ள செடி: தாவரங்கள் மற்றும் உட்புற தாவரங்கள் வீட்டில் ஒரு இனிமையான சூழ்நிலையும் சுத்தமாக காற்றோட்டத்தையும் கொடுக்கின்றது.
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் முட்செடிகளை வீட்டில் வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக ஈர்க்கப்படும்.
இதனால் வீட்டில் நிதி நிலை மோசமடைவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி அற்ற நிலை ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
பழுதடைந்த கடிகாரம்: வாழ்க்கை என்பதே நேரம் தான் என்று கூற வேண்டும். இப்படி இந்த வாழ்க்கை மரணத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பதை கடிகாரம் உணர்த்திக்கொண்டே இருக்கின்றது.
இதனால் வீட்டில் பழுதடைந்த கடிகாரத்தை ஒருபோதும் வைக்க கூடாது. இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
உடைந்த கண்ணாடி: உடைந்த கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது எதிர்மறை உணர்வுகளைத் தூண்டக்கூடியது.
மேலும் இதைனை வீட்டில் வைத்திருப்பதால் தீய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும்.
உடைந்த சாப்பாட்டு மேசை: வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் சாப்பாட்டு மேசை மிகவும் முக்கியமாகதாக பார்க்ப்படுகின்றது.
குறிப்பாக, மேஜையின் மையப் பகுதியில் விரிசல் ஏற்பட்டாலோ, கால்கள் உடைந்திருந்தாலோ, உடனடியாக அதனை அப்புறப்புடுத்த வேண்டும்.இது குடும்பத்தில் உள்ளவர்களின் மன நிம்மதியை சீர்குலைக்கும்.
வாடிய தாவரங்கள்: வீட்டில் ஒருபோதும் வாடிய தாவரங்களை வைக்க கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பணபிரச்சினை மற்றும் குடுப்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படவும் காரணமாக அமையும்.
எதிர்மறையான கலைப்படைப்புகள் அல்லது ஓவியங்கள்: எதிர்மறையான கலை படைப்புகள் வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை பாதிப்பதாக அமையும்.
இவை எதிர்மறையான சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தால் கெட்ட சிந்தனைகள் தோன்றி மன அமைதியையும் தெளிவான சிந்தனையையும் சீர்குலைக்கும்.