பல விதமான சோதனைகளை செய்து சாதனைகள் படைப்பதில் ஜப்பான் நாட்டினர் வல்லவர்கள்.
அந்த வகையில் தற்போது லிக்னோசாட் (Lignosat) எனப் பெயரிடப்பட்ட மரத்தாலான செயற்கைக் கோளை தயாரித்துள்ளது ஜப்பான்.
ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகமும் சுமிட்டொ ஃபாரஸ்ட்ரி என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த மர செயற்கைக்கோள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்படவுள்ளது.
விண்வெளியில் அவற்றின் தாங்கும் திறன்களைக் கொண்டு மக்னோலியா மரத்தினால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
10 கன சென்டிமீட்டர் அளவு கொண்ட, இந்த செயற்கைக்கோள் சூரிய மின் தகடுகளால் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த மர செயற்கைக் கோள்கள் பூமியில் நுழையும்போது எரிந்து காற்று மாசு அபாயத்தைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.