உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மற்றும் உடற்பயிற்ச்சி எந்தளவு முக்கியமோ அதே அளவு சிறந்த தூக்கமும் இன்றியமையாதது.
ஆனால் தற்காலத்தில் முறையற்ற உணவுபழக்கம் மற்றும் போதிய உடற்சிறின்மை போன்ற காரணங்களால் பெரும்பாலானவர்கள் இரவில் போதிய தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர்.
அது மட்டுமன்றி மன அழுத்தம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலானர்கள் இரவில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலையணை இல்லாமல் தூங்குவது தூக்கம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தலையணை இல்லாமல் துங்குவது ஒரு சிறிய மாற்றம் என்றாலும் இது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தலையணை இல்லாமல் தூங்கவே முடியாது என நினைப்பவர்கள் முடிந்தவரை மெல்லிய தலையணையை பயன்பத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு துணைப்புரியும்.
தலையணை இன்றி தூங்குவதால் முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளையும் தவிர்த்துக்கொள்ள முடியும். தலையணையில் உள்ள பாக்டீரியாக்கள் இரவு நேரத்தில் முகத்தில் பரவுவது முகப்பரு மற்றும் சரும தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
விரைவில் முதுமை தன்மை ஏற்படவும் முகச்சுருக்கங்கள் ஏற்படவும் உயரமான தலையணை வைத்து தூங்குவது காரணமாக அமைகின்றது.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும், முதுகு வலி மற்றும் கழுத்து வலி போற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் தலையணையை தவிர்ப்பது அல்லது மிக மெல்லிய தலையணையை பயன்படுத்துவது சிறந்த தீர்வு கொடுக்கும்.