பொதுவாகவே அனைவருக்கும் தங்களது வீட்டில் பணமானது மழையாகக் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் ஒரு சில வாஸ்து குறைப்பாட்டின் காரணமாக அது நடக்காமலே போய்விடும். நீங்கள் என்ன தான் செய்தாலும் வீட்டில் பணம் நிலைத்து நிற்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். அதிகாலையில் எழும்பியவுடன் நீங்கள் இதை செய்து பாருங்கள்.
வீட்டில் எப்போதும் பணமானது நிலைத்து நிற்க நீங்கள் பணம் செலவழிக்காமல் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வீட்டின் நிலப்படி வாசற்கதவில் தினமும் இருபுறமும் மஞ்சள் தூள் தூவி வைக்கவும்.
இந்த பரிகாரத்தை தினமும் அதாவது காலையில் எழும்பி நீராடி, 21 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.
இதை செய்வதன் மூலம் வீட்டில் லட்சுமி வருகை இருப்பதோடு நிதிநிலைமையும் உயரும். இந்த பரிகாரம் செய்யும் போது மஞ்சள் பொடியாக இருக்க வேண்டும்.
பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் லட்சுமி தேவியை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். வீட்டு வாசலில் மஞ்சள் பொடி அதிகமாக கிடக்கிறது என்றால் அதை ஓர் செடியில் போடவும்.
ஒரு வெள்ளி குங்கும சிமிலில் கொஞ்சம் மஞ்சள் மற்றும் குங்கும பூ சேர்த்து அதை வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜை அறையில் உள்ள மகாலெட்சுமி தேவியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து, நாம் பணம் வைக்கக் கூடிய பெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அதை எடுத்து லெட்சுமி தேவியின் முன் வைத்து பூஜிக்கவும். அப்படி செய்து வர வீட்டில் லெட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வ நிலை அதிகரிக்கும்.