வருடாந்த சந்திர புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பின் பேரில் கூடுதலாக கொரோனா மையங்களை சீனா உருவாக்கி வருகின்றது.

Hebei மாகாணத்தின் தலைநகரான Shijiazhuang வெளிப்புற பகுதியில், கூடுதலாக 3,000 தனிமைப்படுத்தம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான ஒளிப்படங்களை மாநில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், சீனா விரைவாக கள மருத்துவமனைகளை உருவாக்கி, உடற்பயிற்சிக் கூடங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றியபோது, வுஹானில் அப்போதைய தொற்றுப்பரவல் சாதரணமாக கட்டுப்படுத்தப்பட்டது.

இதனிடையே ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்ததையடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.