விருது விழாவில் பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணன் அவருக்கு நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஜோடியாக விருது வழங்கினார்கள்.
அப்போது மேடைக்கு வந்த நடிகர் பாலகிருஷ்ணா முதன் முதலில் சரத்குமாருக்கு கை கொடுத்துவிட்டு பின்னர் ராதிகாவிடம் சென்று அவரை கட்டிப்பிடித்து பார்மல் ஆக முத்தம் கொடுத்தார்.
அப்போது அருகிலேயே இருந்த சரத்குமாருக்கு கை மட்டும் குலுக்கி விட்டு பின்னர் பேச துவங்கிய அவரை சரத்குமார் பங்கமாக கலாய்த்து விட்டிருக்கிறார்.
ஆம் ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்து விட்டு என்னை கட்டிப்பிடிக்கவில்லையே என்று பாலகிருஷ்ணாவை கேட்ட அந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இதற்கு பாலகிருஷ்ணா சிரித்தபடியே மன்னிப்பு கேட்டு சரத்குமாரையும் பின்னர் கட்டி பிடித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட வருகிறது.
அந்த விழாவில் பேசிய நடிகர் சரத்குமார் சூரியவம்சம் திரைப்படத்தில் எப்படி நான் தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ அதேபோல என்னுடைய மனைவி ராதிகாவை எம்பி ஆக்குவேன் என்று பெருமையுடன் பேசி இருந்தார்.
இந்த வயசிலும் இப்படி ஒரு காதலா? இந்த ஜோடியின் இத்தனை வருட புரிதலை ரசிகர்கள் பார்த்து வியந்து அவர்கள் சிறந்த ஜோடியாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் வலம் வரவேண்டும் என வாழ்த்தி வருகிறார்கள்.