பொதுவாகவே அனைவருக்கும் அம்மா என்றால் பிடிக்கும். மனிதனுக்கு மாத்மதிரமன்றி அனைத்து உயிர்களுக்குமே அதன் தாய் மீது பிரியம் இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட சிலர் தாய் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பார்கள். தாய் சொல்லும் வார்த்தையை வேத வாக்காக நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் குணத்துக்கு நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் தனது தாயை ராணிபோல் நடத்தும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்த ஆண்கள் தாயுடன் மிகவும் ஆழ்ந்த உறவை கொண்டிருப்பார்கள். தாய் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார்கள்.
அம்மாவுடன் நேரம் செலவிடுவதை தங்களின் கடமையாக மாத்திரம் நினைக்காமல் அதனை சொர்க்கமாக நினைப்பார்கள்.இவர்களுக்கு தாய் மீதான அதீத பாசம் இயல்பிலேயே இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பிலேயே உறவுகளுக்காக எதையும் செய்யும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பிறப்பிலேயே தாய் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தாயை எப்போதும் ராணியை போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
கன்னி
ராசியில் பிறந்த ஆண்கள் தாய்க்கு எப்போதும் பாரமாக இருக்க கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் அம்மாவுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.
தாய் மீது எல்லையற்ற அன்பு கொண்ட இவர்கள் தாய் சொல்லுக்கு மறு வார்த்தை சொல்லாதவர்களாக இருப்பார்கள். தாயை இளவரசி போல் கவனித்துக்கொள்வார்கள்.