பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்ற பஸ் மற்றும் வேன் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை இன்று முதல் எழுமாற்றான ரபிட் ஆண்டின் பரிசோதனைக்கு உட்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிசு செரிய பஸ்களில் எண்ணிக்கையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தாவன பண்டுக சுவர்ணஹங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஏதேனும் பஸ் தேவைப்பாடுகள் ஏற்படுமிடத்து அது தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து அதிபர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று தொடக்கம் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதற்கமைய மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றவா என்பது தொடர்பில் அவதானிக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.