பொதுவாகவே கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் அதிக வியர்வையால் நமது உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். 

அதனை ஈடு செய்யும் அளவுக்கு நீரேற்றமான உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டியது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது.

கோடையில் பெண்கள் இந்த பழத்தை தவிர்க்கவே கூடாது... ஏன்னு தெரியுமா? | Consuming Watermelon Can Reduce Breast Cancerஇந்த வகையில் எல்லா காலங்களிலும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாக தர்பூசணி காணப்படுகின்றது.

தர்பூசணிப்பழம் சாப்பிட்டால் நீரேற்றமாக இருக்கலாம். தர்பூசணியில் கிட்டத்தட்ட 92 சதவீத நீர் உள்ளது, இது நம் உடலை நீரேற்றம் செய்து, இழந்த ஆற்றலை மீட்டு கொடுப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.

கோடையில் பெண்கள் இந்த பழத்தை தவிர்க்கவே கூடாது... ஏன்னு தெரியுமா? | Consuming Watermelon Can Reduce Breast Cancer

கோடைக்காலத்தில் அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒரு பழமாகவே தர்பூசணிப்பழம் காணப்படுகின்றது.குறிப்பாக கோடைக்காலத்தில் இந்த பழத்தை பெண்கள் சாப்பிட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம். 

பெண்களை பொருத்தவரையில் அதிகமாக தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்,மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளை தடுப்பதில் தர்பூசணி பழத்தில் இருக்கக்கூடிய லைக்கோபீன் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

கோடையில் பெண்கள் இந்த பழத்தை தவிர்க்கவே கூடாது... ஏன்னு தெரியுமா? | Consuming Watermelon Can Reduce Breast Cancer

இதனை பெண்கள் அதிகமாக சாப்பிடுவதால் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கொடுப்பதுடன் சருமத்தை மிகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.

தர்பூசணியில் நிறைந்துள்ள பீட்டா மற்றும் கரோட்டின் மூலமாக முகம் மற்றும் சருமம் எப்போதும் நீரேற்றமாக இருக்கும். மேலும் உடலில் ஏற்படும் அலர்ஜிகளையும்  தடுக்கக்கூடிய ஆற்றல் இதில் காணப்படுகின்றது. 

கோடையில் பெண்கள் இந்த பழத்தை தவிர்க்கவே கூடாது... ஏன்னு தெரியுமா? | Consuming Watermelon Can Reduce Breast Cancer

தர்பூசணியின் தோல் மற்றும் சதை சிட்ரூலைன் என்ற அமினோ அமிலத்தால் நிரம்பியுள்ளது, இது இரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்தி இரத்த ஓட்டத்தை சீராக தூண்டுகிறது.மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் செரிமானத்தின் போது நம் உடலில் சேமிக்கப்படும் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும். இதனால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர எடை குறையும்.

கோடையில் பெண்கள் இந்த பழத்தை தவிர்க்கவே கூடாது... ஏன்னு தெரியுமா? | Consuming Watermelon Can Reduce Breast Cancer

தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கித்தை பாதுகாத்து பல்வேறு பருவகால நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.

தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

கோடையில் பெண்கள் இந்த பழத்தை தவிர்க்கவே கூடாது... ஏன்னு தெரியுமா? | Consuming Watermelon Can Reduce Breast Cancer

கோடையில் அனைவருக்கும் உகந்த பழமாக தர்பூசணி இருந்தாலும் இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.