இறைபதம் அடைந்த இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் காரணமான நாளை (25) துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

தேசிய, சமய மற்றும் புத்தசாசன ரீதியாக இலங்கைக்கு அவர் ஆற்றிய உன்னத சேவையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இறுதிக்கிரியை இடம்பெறும் நகர எல்லைக்குள் துக்க தினமாகக் கொண்டு நாளைய தினம் கொழும்பு மாவட்டத்தில் இறைச்சிக்காக விலங்குகள் அறுத்தல் நிலையம் மற்றும் மாமிச விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் மதுபான சாலைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.