இன்று உலகலாவிய ரீதியில் புற்றுநோய் என்பது பாரிய அவில் பெருந்தொகையான மக்களுக்கு வருகின்றது.

இதற்கான காரணம் மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் தான். எந்த ஒரு மனிதனுக்கும் அவன் பிறப்பதில் இருந்து புற்றுநோய் வருவதில்லை .

மனிதனின் செயற்பாடுகளாளே இந்த நோய்கள் வருகின்றது. புற்றுநோய்  பல வகை உண்டு. அதில் ஒன்று தான் வாய் புற்று நோய் அதை இனம் காண சில அறிகுறிகள் காட்டும் அதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாய் புற்றுநோய் புகைபிடிப்பவர்களுக்கு மற்றும் மது அருந்துபவர்களுக்கு முக்கியமாக வரும். இது மட்டுமல்லாமல் மோசமான உணவுப்பழக்கம் இருந்தாலும் வாய் புற்று நோய் வரும்.

எனவே இவ்வாறு இருப்பவர்கள் கீழ் உள்ள அறிகுறிகளை கண்டால் வைத்தியரை நாடவும்.

வாயில் இந்த அறிகுறிகள் இருகின்றதா? வாய் புற்றுநோயாக இருக்கலாம் ஜாக்கிரதை | Symptoms Mouth You Know You Have Oral Cancer

1. வாய் தொண்டை பகுதிகளில் சிவப்பு அல்லது வெள்ளை திட்டுக்கள் இருக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும். வாயில் சில இடங்களில் அல்லது தொண்டை பகுதிகளில் சிவப்பு கட்டிகள் நீண்ட நாட்களாக காணப்பட்டால் அதை மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.

இவ்வாறான அறிகுறிகளை வைத்து நீங்கள் புற்றுநோய் என்று உறுதிபடுத்தி கொள்ளாமல் அதை முறையாக வைத்தியரை அணுகியவுடன் உறுதிப்படுத்தவும்.

வாயில் இந்த அறிகுறிகள் இருகின்றதா? வாய் புற்றுநோயாக இருக்கலாம் ஜாக்கிரதை | Symptoms Mouth You Know You Have Oral Cancer

2. நீங்கள் உணவை உட்கொள்ளும் போது விழுங்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? தண்ணீர் குடிப்பதிலும் சிரமாக இருத்தல் இந்த அறிகுறிகள் ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து இருந்தால் அது உங்கள் வாய் புற்றுநேய்க்கான அறிகுறியாகும். இதனால் நீங்கள் உடனே வைத்தியரை நாட வேண்டும்.

வாயில் இந்த அறிகுறிகள் இருகின்றதா? வாய் புற்றுநோயாக இருக்கலாம் ஜாக்கிரதை | Symptoms Mouth You Know You Have Oral Cancer

3. நாக்கு காரணமில்லாமல் மறத்து போகின்றதா? சில நேரங்களி்ல் தொண்டையில் உணவு சிக்கியதை போல உணர்வு இருத்தல், சில பற்கள் வலுவிழுந்து விழுதல் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வாய் புற்று நோய் அறிகுறியாக இருக்கலாம்.

இவ்வாறான பிரச்சனைகள் உங்களுக்கு மூன்று வாரத்திற்கு மேல் இருந்தால் சற்றும் தாமதிக்காமல் வைத்தியரை நாடுவது மிகவும் நல்லது.

வாயில் இந்த அறிகுறிகள் இருகின்றதா? வாய் புற்றுநோயாக இருக்கலாம் ஜாக்கிரதை | Symptoms Mouth You Know You Have Oral Cancer