ஜேசிபி இயந்திரம் ஒன்றில் வந்து கெத்து காட்டிய மணமக்கள் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளான காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது திருமணம் என்றாலே வித்தியாசமான ஒரு நிகழ்வுகளை செய்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அந்த வகையில் இங்கு மணமகனும், மணமகளும் ஜேசிபி -யில் அமர்ந்து திருமண மண்டபத்திற்குள் நுழைகின்றனர்.

ஜேசிபி-யில் வந்து கெத்து காட்டிய மணமக்கள்... பின்பு அரங்கேறிய சோகம் | Bride Groom Swag Entry On Jcb Fell Down

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் கண்ணிமை அசையாமல் மகிழ்ச்சியுடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மணமக்கள் அமர்ந்திருந்த ஜேசிபி உடைந்து இருவரும் நொடிப்பொழுதில் தரையில் விழுந்துள்ளனர்.

இருவரும் விழுந்த விதத்தை பார்த்தால், அவர்களுக்கு அதிக காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை தெளிவாக காட்டியுள்ளதுடன், விருந்தினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.