பொதுவாக உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்றால் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கின்றன.
அத்துடன் உணவு என்று கூறும் போது சாதம், குழம்பு என சாப்பிடாமல் அதிகமான காய்கறிகள்,பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் இது போன்று பச்சையாக உணவை சாப்பிடும் பொழுது உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை எளிதில் வழங்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் ஏழைகளின் கனி என அழைக்கப்படும் அப்பிள் பழம் பொருளாதார நெருக்கடியால் விலை சிகரத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டது.
ஆனால் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கபெறும் அப்பிள் பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு என்னெ்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது தொடர்பாக தெளிவாக பார்க்கலாம்.
1. சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்ற பயத்தில் பழங்கள் சாப்பிடாமல் இருப்பவர்கள் அப்பிள் பழத்தை எந்தவிதமான கவலையும் இன்றி சாப்பிடலாம். ஏனெனின் அப்பிளில் சர்க்கரையின் அளவு குறைவாக தான் உள்ளது.
2. ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றியிலுள்ள அழுக்களை செரிமானம் வழியாக வெளியேற்றஉ உதவியாக இருக்கின்றது.
3. அப்பிள் பழம் அதிகமாக சாப்பிடும்பொழுது அவ்வளவாக பசி ஏற்படாது. இதிலிருக்கும் சில ஊட்டசத்துகள் பசியை தடுத்து வைக்கின்றது.
4. ஆன்டிஆக்ஸிடன்ட் உணவுகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கிறது. இதனால் அப்பிள் பழம் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
5. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கும் ஆப்பிள் சாப்பிடுவது நன்மை பயக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.