பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் உண்மையாக இருந்தாலும் இதையும் தாண்டி குழந்கைளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

பசிக்கு அடுத்தப்படியாக குழந்தைகள் பெற்றோரை அழைக்கவே அதிகம் அழுகின்றன. குழந்தைகளால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல முடியாது அதற்கு ஏற்படும் எல்லா அசௌகரியங்களுக்கும் ஒரே துலங்கள் அழுகையாக தான் இருக்கும்.

பசியையும் தாண்டி குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கின்றதா? | Child Care Reasons For Baby S Cryingகுழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாகவும் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பொதுவாக பசியை தவிர்த்து குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பது குறித்து  இந்த பதிவில் பார்க்கலாம்.

பசியையும் தாண்டி குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கின்றதா? | Child Care Reasons For Baby S Crying

பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள்.அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவர்களை சௌகரியமாக வைத்திருக்க துணைப்புரியும். 

பசியையும் தாண்டி குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கின்றதா? | Child Care Reasons For Baby S Crying

தாய் எதைச் சாப்பிட்டாலும் தாய் குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும்.

இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும். பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு.

பசியையும் தாண்டி குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கின்றதா? | Child Care Reasons For Baby S Crying

அதே சமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு.

மேலும் சிறு குழந்தைகளின் எலும்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் கையாளும் போது ஏற்படும்  கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளை கையாளும் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.  இந்த நோயினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும்  வலியை அனுபவிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கின்றார்கள் .

பசியையும் தாண்டி குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கின்றதா? | Child Care Reasons For Baby S Crying

பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள். அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.