2020 பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த 54 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
அத்தோடு நடந்து வரும் தேர்தல் பிரசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்காததற்காக உள்ளூராட்சி அமைப்புகளின் 61 உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் வேட்புமனு தாக்கல் செய்த 102 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக கடந்த மே மாதம் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுடனேயே இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தி பதிலளித்தது.
அத்தோடு இதற்கு எதிராக மேல் மாகாணத்தின் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை விசாரிக்காமல் நிராகரித்து கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.