பொதுவாகவே எல்லா வயதினரும் விரும்பி உண்ணக் கூடிய உணவுப் பொருட்களில் ஐஸ்கிரீம் முக்கிய இடம் வகிக்கின்றது.
சிறியவர்களாயினும் சரி பெரியவர்களாயினும் சரி ஐஸ்கிரீமை பார்த்தவுடனேயே குஷியாகிவிடுவது வழக்கம்.
ஆனால் இந்த சுவையான உணவு எப்படி தயார் செய்யப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?அதன் செயல்முறையை காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த ஐஸ்கிரீமில் ஒரு சிறப்பு விஷயம் சேர்க்கப்படுவதால், அதைப் பார்த்தவுடன் இணையவாசிகள் மற்றும் உணவு பிரியர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் தலைப்பு, "ஒரு தொழிற்சாலையில் சாக்லேட் ஐஸ்கிரீம் தயாரித்தல்" என்று எழுதி பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சுவாரஸ்யமான வீடியோவில், ஒரு தொழிற்சாலைக்குள் சாக்லேட் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு நபர் ஐஸ்கிரீமை உருவாக்கி அதை ஒரு குல்பி போல் தயாரிக்க தொடங்குகிறார்.
வீடியோ முன்னோக்கி செல்லும் போது, அவர் பாப்சிகல்ஸை டி-மோல்ட் செய்து சாக்லேட் சிரப்பைத் தயாரிக்கிறார். அடுத்து நடந்தவை பலரின் கவனத்தை ஈர்த்தது மற்றும் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.