இன்றைய கால கட்டத்தில் லிப்ஸ்டிக் பயன்படுத்தாத பெண்களை காண்பது மிகவும் அரிது அப்படி லிப்ஸ் டிக் போடுவதற்கு பழகிவிட்டால் அதனை தவிர்ப்பது மிகவும் கடினமான விடயமாகிவிடும்.
இப்படி தொடர்ச்சியாக லிப்ஸ் டிக் பயன்படுத்துவதனால் நாளடைவில் உதடுகள் கருமையாகிவிடுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிடும் இது பொதுவாகவே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்று.
இது பெண்களை உளவியல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கின்றது. வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டுக் கருமையை போக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் 20 நிமிடங்கள் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை படிப்படியாக மறையச் செய்யும்.
தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதை தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 தொடக்கம் 10 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து, பின் 15 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமுக்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும்.
கருமையுடன் வறட்சியும் நீங்கிவிடும்.மேலும் தேன் உதட்டை எப்போதும் ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகின்றது. தினமும் இதை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை பெறமுடியும்.
மஞ்சளுடன் பால் கலந்து பேஸ்ட் செய்து அதனை உதட்டில் அப்ளை செய்து காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். காய்ந்து அதுவாகவே உதிர்த்து விழும்போது இரவு தூங்கும் போது செய்து வந்தால் உதட்டில் காணப்படும் இறந்த செல்கள் நீங்கி பொழிவு கிடைக்கும்.
ஆரஞ்சி பழ தோலை காயவைத்து பொடியாக்கி சிறிதளவு பால் சேர்த்து அந்த பேஸ்டை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் ரோஜா பூ போல மென்மையாக மாறும்.