பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. காரணம் நமது முன்னோர்கள் முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது நமது முன்னோர்களின் கருத்து இதை பின்பற்றும் நோக்கில் உண்மையான காரணமே தெரியாமல் நம்மில் பலரும் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ப்பதில்லை.
இப்படி நமது முன்னோர்கள் சொல்லி வைக்க உண்மையான காரணம் என்னவென்று எப்போதாவது உங்களுக்குள் கேள்வி எழுந்கிருக்கிறதா? அதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக மற்ற மரங்களுடன் ஒப்பிடும் போது முருங்கை மரம் சற்று உறுதியற்ற மரமாக காணப்படுகின்றது. அதனை வீட்டில் வளர்த்தால் மழைக்காலங்களில் சில சமயம் இதன் கிளைகள் முறிந்து வீட்டை சேதப்படுத்தக்கூடும்.
ஒரு தற்காப்பு கருதியே அதனை வீட்டில் வளர்க்க கூடாது என சொல்லியிருக்கின்றார்கள். முருங்கை மரம் வளர்த்தால் வீட்டில் சிறுவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த மரத்தில் ஏறி விளையாடக்கூடும் முருங்கை மரம் உறுதியற்றது என்பதால் கிளைகள் முறிந்து அவர்கள் கீழே விழும் வாய்ப்பு அதிகம் இதனால் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு ஆபத்து என்பதும் ஒரு காரணம்.
முருங்கை மரத்தில் அதிகமாக கம்பளி பூச்சிக்கள் உற்பத்தியாகும் இது உடலில் பட்டாலே அரிப்பை ஏற்படுத்தும் விஷ தன்மை வாய்ந்தது.
முருங்கை மரத்தை வீட்டின் அருகில் வைத்தால் இந்த பூச்சிகள் வீட்டினுள் வர வாய்ப்பு அதிகம் அதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆபத்து இதனாலேயே முருங்கை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள்.