சர்க்கரை நோயாளிகளுக்கு சில நிமிடங்களில் நல்லதொரு பலனை கொடுக்கும் ஜுஸ் குறித்து இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலும் உணவுப் பழக்கவழக்கங்களின் மாற்றம் மற்றும் நவீன வாழ்க்கையே முக்கிய காரணமாகின்றது.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாடு இருப்பதுடன், அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நீண்ட காலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் குணப்படுத்த முடியாத நீரிழிவு நோய் ஒருவரின் வாழ்நாளையும் குறைத்துவிடுகின்றது.
குறித்த நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லாத நிலையில், உணவுமுறையிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்தால் இதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
இந்நிலையில் உடம்பில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த பல டிப்ஸ்கள் இருந்தாலும், நிமிடத்தில் நீரிழிவு நோயின் மாற்றத்தினை ஒரே ஒரு இலை உதவி செய்கின்றது.
சேப்பங்கிழங்கு பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில், இதனை வறுவல் செய்தால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் போட்டி போட்டு சாப்பிடுவார்கள்.
நார் சத்து, மாவுச்சத்து நிறைந்த சேப்பங்கிழங்கில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த முடியுமாம். அதுமட்டுமில்லாமல் இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயததையும் குறைக்க முடியும்.
இந்த கிழங்கு மட்டுமின்றி இதில் காணப்படும் இலைகளும் பல சத்துக்களை கொடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகின்றது என்பது ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின்கள் A, B6, C, E முதல் நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இவற்றில் காணப்படுகின்றன. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் காணப்படுவதுடன், கலோரிகளின் அளவும் மிக குறைவே.
எடையை குறைக்க நினைப்பவர்கள், இரத்த அழுத்த பிரச்சினையினை போக்கும் குணவும் இந்த இலைக்கு உண்டு. மேலும் இந்த இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்து என்றும் கூறப்படுகின்றது.
சேப்பங்கிழங்கு இலையின் சாறை தொடர்ந்து குடித்து வந்தால், ரதத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென அதிகரிக்கவும் செய்யாதாம்.
செரிமான பிரச்சினை, கண் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல குணங்கள் இந்த இலை சாறில் இருக்கின்றது.