பொதுவாகவே வீட்டில் சமைக்கும் போது பாத்திரங்கள் அடிப்படிப்பது வழக்கமான தொன்றுதான் ஆனால் அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினமானது.

இவற்றை சுத்தம் செய்யும் போது சிலநேரங்களில் பாத்திரங்கள் விரைவில் உபயோகம் இல்லாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்தப்பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் சிலப் பொருட்களைக் கொண்டு உடனடியாக பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற இந்த விடயங்களை செய்துப்பாருங்கள்.

கரிப்பிடித்த பாத்திரங்கள் பளபளப்பாக மாற

  • கரிப்பிடித்த பாத்திரத்தில் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை சம அளவில் சேர்த்து 15 நிமிடத்திற்கு மூடி ஊற வைக்க வேண்டும் பிறகு சவக்காரம் போட்டு கழுவினால் கறைகள் நீங்கும்.
  • கரி மற்றும் அடிப்படித்த பாத்திரத்தில் எலுமிச்சை சாறுடன் சவக்காரம் போட்டு கழுவ கரி பிடித்த பாத்திரம் பளபளப்பாக மாறும்.
  • கரி மற்றும் அடிப்படித்த பாத்திரங்களை சுடுதண்ணீரில் ஊறவைத்து சவக்காரம் சேர்த்து கழுவினால் கறைகள் எளிதில் நீங்கும்.
  • அடிப்பிடித்த பாத்திரத்தில் கொஞ்சமாக உப்பு சேர்த்து பாத்திரத்தை நன்றாக கழுவினால் கரி எளிதில் நீங்கும்.
  • கடற்பாசியும் பாத்திரங்களில் இருக்கும் கரியை நீக்கும். பாத்திரம் கழுவும் போது கடற்பாசியில் சவக்காரம் சேர்த்து கழுவினால் பாத்திரத்தில் இருக்கும் கரி நீங்கும்.
  • மேலும், பாத்திரங்களை ஊற வைப்பது கரி மற்றும் அடி பிடித்ததை நீக்க உதவும்.