தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் சர்ச்சைகளை எழுப்பி வரும் நிலையில் சமீபத்தில் தஞ்சாவூர் காரங்க எல்லாரும் ரெண்டு பொண்டாட்டிக்காரங்க என வனிதா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் வனிதா மீது போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன. திருமண சர்ச்சையால் டுவிட்டரில் இருந்து வெளியேறி இருந்த வனிதா மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

டுவிட்டரில் நுழைந்ததும் நானும் தஞ்சாவூர் காரி தான்.. நான் தெரியாமல் தவறாக பேசி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் தம்பி தங்கச்சிங்களே என பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் மூத்தவர்களைப் பற்றி கவலைப்படவில்லை.