நாம் ஒவ்வொருவருக்கும் பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. என்னதான் நல்ல சம்பளத்துடன் வேலைக்கு சென்றாலும் வறுமை என்ற ஒன்று எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருக்கும்.
வாழ்க்கையில் வறுமை மட்டுமல்ல கடன் தொல்லை, குடும்பத்தில் பிரச்சினை, என பல பிரச்சினை வந்துக் கொண்டிருக்கும். அப்படி நீங்கள் நிதி நெருக்கடியை அதிகம் சந்திப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கும் அதிலும் இந்த 4 காரணங்கள் உங்கள் வீடுகளில் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
உங்கள் வீட்டில் நீங்கள் ஆசையாக வாங்கி வைத்திருக்கும் நகைகள் காணாமல் போகவே கூடாது அப்படி போனால் அது உங்களுக்கு பண நெருக்கடியை ஏற்படுத்துமாம். இப்படி நகைகள் காணமல் போனால் செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவி உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். மேலும் இந்தப் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.
பொதுவாகவே தண்ணீரை வீணாக்கினால் பழ இழப்பு ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்லவார்கள். ஆனால் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை இப்படி வீடுகளில் குழாயில் இருக்கும் தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்தால் கையில் இருக்கும் பணம் கரைந்து நிதி நெருக்கடி ஏற்படும் என அர்த்தம்.
நமது அன்றாட வாழ்க்கையில் பாலை பயன்படுத்துவது வழக்கமானது தான். இந்தப் பால் கைதவறி விழுவது நல்லதல்ல. அப்படி கீழே விழுந்தால் லட்சுமி தேவி உங்கள் மீது கோபத்தில் இருப்பதாக அர்த்தம். இதனால் நீங்கள் அதிக பண நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
நீங்கள் உங்கள் வீட்டின் அழகிற்காக பல செடிகளை வளப்பீர்கள். அப்படி வளர்க்கும் செடியில் மணி பிளாட் மிக முக்கியமானது. இந்த செடி வீட்டில் செழிப்பாக வளர்ந்தால் உங்களுக்கு எவ்வித பணப்பிரச்சினைகளும் இல்லை. ஆனால் இந்த செடி வாடி காய்ந்து போனால் உங்களுக்கு பணப்பிரச்சினை வரப்போகிறது என்று அர்த்தம்.