பொதுவாக மனிதர்களின் உடல் நிலை 80% தண்ணீரால் ஆனது. இதனால் உடல் இயக்கத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவு இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என பலர் கூறுவார்கள்.
ஆனால் உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி, மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். மேலும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நம்முடைய உடம்பில் பல சிக்கல்கள் ஏற்படும். கோடைகாலங்களில் குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
அந்த வகையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. உடலிலுள்ள கழிவுகள், மாசுக்கள் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும் என்றால் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. உடலிலுள்ள கழிவுகள் வெளியேறிய பின்னர் புது விதமான எனர்ஜி கிடைக்கும்.
3. போதியவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் அது வெப்பத்தை அதிகப்படுத்தி அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதுவும் பெண்களுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
4. உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றம் தண்ணீர் குடிப்பதால் அதிகமாகின்றது.
5. போதியளவு தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் தசை பிடிப்புக்கள் அதிகமாக ஏற்படும். இது தங்கியிருக்கும் கழிவுகளால் ஏற்படும்.