நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இத்தகைய நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மக்கள் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இமாச்சல பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மே 13 ஆம் தேதி வரை மாநில அரசு விதித்து இருந்தது. தொற்று பரவல் கட்டுக்குள் வராததால் மே 17 ஆம் தேதி மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த ஊரடங்கானது வரும் 26 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.