பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் உறவினர்களை சந்திப்பதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வேன் ஒன்றில், ஊருக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களது வேன் பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா மாவட்டத்தில் கான்குவா டோக்ரான் பகுதியில் வந்தபொழுது, மியான்வாலி கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த குழந்தைகள், பெண்கள் என பலர் சிக்கி கொண்டனர். தொடர்ந்து வேன் நீரில் மூழ்கியது. இதில், 7 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என மொத்தம் 11 பேர் பலியானார்கள்.
வேகமுடன் சென்ற வேனை ஓட்டுனரால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. இதனால் வேன் கட்டுப்பாட்டை மீறி கால்வாயில் பாய்ந்தது என சம்பவ பகுதியில் இருந்த ஒருவர் கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.