48 மணித்தியாலங்களில் 15 வார்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வார்ட் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.

பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வார்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)