இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் மொத்தமாக 106 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பதுடன், மேலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் ஆயிரத்து 981 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதேநேரம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 625 கொரோனா நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதுடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 99 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
மேலும் இந்த வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.