குருணாகலை மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததார்.