சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர் கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர், சுவாசப் பிரச்சினை மற்றும் நெஞ்சுவலி காரணமாக பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் சிறப்பு கடற்படைப் பிரிவு நேற்று காலை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது தொண்டைமனாறிலிருந்து 11 கடல் மைல் தொலைவிலுள்ள பகுதியில் டிங்கிப் படக்கு ஒன்றில் பயணித்தபோது நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, முன்னெடுக்கப்பட்ட விசாணையின் போது கைதுசெய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வருகை தந்தமை கண்டறிப்பட்டது.
அவர்களுடன் 21 மற்றும் 52 வயதான பருத்தித்துறை, முல்லைத்தீவினைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் வருகை தந்துள்ளனர். அத்துடன், அவர்களில் ஒருவர் முன்னாள் போராளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவாசப் பிரச்சினை மற்றும் நெஞ்சுவலி காரணமாக பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நால்வருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.