சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தை டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த இரு இயக்குனர்களும் ரஜினியிடம் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரை ரஜினி தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
- Master Admin
- 04 May 2021
- (511)
தொடர்புடைய செய்திகள்
- 18 January 2021
- (2296)
'சும்மாவே மிரட்டுவாங்களே..' இலங்கை நடிகை...
- 04 July 2023
- (225)
அதீத முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்வை...
- 02 July 2023
- (273)
அடுத்தடுத்த இழப்புகளுக்கு ஆளாகுகிறார்களா...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு
- 11 December 2024
யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் பலி - தமிழர் பகுதியில் சம்பவம்
- 11 December 2024
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்
- 11 December 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிப்பான தேனில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்
- 06 December 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.