பண்டாரவெல எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் மணமகன் மற்றும் மணமகள் உட்பட அவர்களது உறவினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 10 பேருக்கு நேற்றையதினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் உள்ள 5 இற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.